திரு. இராம்தாஸ் அத்வாலே. திரு. திருமாவளவன் mp திடீர் சந்திப்பு...

அயல்நாடுகளில் பயிலும் ஆய்வு மாணவர்களுக்கான ஓவர்சீஸ் ஸ்காலர்ஷிப் பெறுவதற்குப் புதிதாக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தி இன்று சமூகநீதி துறை இணை அமைச்சர் 
திரு. இராம்தாஸ் அத்வாலே அவர்களிடம் கடிதம் அளித்தேன்.அதில் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன்:

இந்திய கலாச்சாரம், பாரம்பரியம்,வரலாறு, சமூக ஆய்வுகள் தொடர்பான தலைப்புகள்,பாடத்திட்டங்களுக்கு  நிபந்தனை விதிப்பது தன்னிச்சையானது, நியாயமற்றது மற்றும் மிகையானது. 
இது மாணவர்கள்  உதவித்தொகை (NOS ) பெறுவதற்கு தடையாக இருக்கிறது..இந்தியாவின்  உச்ச நீதிமன்றம், பரந்த அளவிலான அல்லது தேர்வு சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் சட்டங்கள் / விதிகளை ரத்து செய்துள்ளது. 

எனவே, இந்த சமூகங்களின் நலன் மற்றும் சமூக நீதியின் உணர்வின் அடிப்படையில், நான் உங்களிடம் பின்வரும் கோரிக்கைகளை  முன்வைக்கிறேன் 

i) NOS இன் கீழ் வழங்கப்படும் உதவித்தொகைக்கான இடங்களின் எண்ணிக்கை (பட்டியல் சாதிகள், மறுக்கப்பட்ட, நாடோடி மற்றும் அரை நாடோடி பழங்குடியினர், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பாரம்பரிய கைவினைஞர் பிரிவுகளுக்கு) ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 2000 மாணவர்களென அதிகரிக்கப்பட வேண்டும்

ii) வருமான வரம்பு ரத்து செய்யப்பட வேண்டும் அல்லது ஆண்டுக்கு ரூ 20 லட்சம் என ஆக்கவேண்டும்.
 
iii) ஹியூமனிட்டீஸ் 
 பாடங்களில் மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

 iv) இந்திய கலாச்சாரம் பாரம்பரியம் வரலாறு  இந்தியா பற்றிய சமூக ஆய்வுகள் தொடர்பான.தலைப்புகள் / படிப்புகள் மீதான கட்டுப்பாடு திரும்பப் பெறப்படவேண்டும்.

கடிதத்தைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைசெய்து செயலருக்கு அதை அனுப்பினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு சட்டமான வரலாறு

எழுவர் விடுதலைக்கு எதிரி சீமான்'

பிரதமர் பதவிக்கு திட்டமிடுகிறார் திரு. மு.க ஸ்டாலின்