தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு சட்டமான வரலாறு

தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு சட்டமான வரலாறு: 1951 - தமிழ்நாட்டில் நடந்த தொடர் போராட்டங்களால் அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் செய்யப்பட்டது. 1951 - குமாரசாமி ராஜா தலைமையிலான காங்கிரஸ் அரசு 41% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியது.
(Bc:25%, SC:16%) 1971 - இட ஒதுக்கீட்டை 49% உயர்த்தினார் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி. (Bc:31%, SC:18%) 1979 - பொருளாதார இட ஒதுக்கீட்டை அறிவித்தார் அன்றைய முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர்.
1980 - பொருளாதார இட ஒதுக்கீடு முடிவைக் கைவிட்டு இட ஒதுக்கீடு அளவை 68% ஆக உயர்த்தினார் எம்.ஜி.ஆர். 1989 - MBC பிரிவு உருவாக்கப்பட்டு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. 1989 - பழங்குடியினருக்கு 1% இட ஒதுக்கீடு அறிவிக்கட்டு, தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டின் அளவை 69% ஆக உயர்த்தினார் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி
1992 - இட ஒதுக்கீடு 50% தாண்டக் கூடாது என உச்சீதிமன்றம் தீர்ப்பு. 1993 - 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் சட்ட முன் வடிவை சட்டமன்றத்தில் அன்றைய முதல்வர் செல்வி.ஜெயலலிதா அறிமுகம் செய்தார்.
1994 - தமிழ்நாட்டில் அறிமுகம் செய்த 69% இட ஒதுக்கீடு அரசியலமைப்பின் ஒன்பதாம் அட்டவணையில் சேர்க்கப் பட்டது. தற்போதைய இட ஒதுக்கீட்டு முறை: BC: 26.5% BCM: 3.5% MBC: 20% SC: 18% (SC:15% + SCA:3% = 18%) ST: 1% Total = 69%

கருத்துகள்