இடுகைகள்

மார்ச், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆளுநர். ஆர்.என். ரவி.. தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

படம்
இன்று தமிழக ஆளுநர் திரு ஆர்ரவி அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்த தமிழக முதல்வர் மாண்புமிகு திரு ஸ்டாலின் அவர்கள் நீட் விளக்க மசோதா சட்ட முன்வடிவை குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார் இதை தனது ட்விட்டர் பக்கத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பதிவு செய்துள்ளார். தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள சட்டமுன்வடிவுகள் மற்றும் கோப்புகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் மாண்புமிகு ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்களை சந்தித்து கடிதம் அளித்தார்.

திரு. இராம்தாஸ் அத்வாலே. திரு. திருமாவளவன் mp திடீர் சந்திப்பு...

படம்
அயல்நாடுகளில் பயிலும் ஆய்வு மாணவர்களுக்கான ஓவர்சீஸ் ஸ்காலர்ஷிப் பெறுவதற்குப் புதிதாக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தி இன்று சமூகநீதி துறை இணை அமைச்சர்  திரு. இராம்தாஸ் அத்வாலே அவர்களிடம் கடிதம் அளித்தேன்.அதில் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன்: twitter Link இந்திய கலாச்சாரம், பாரம்பரியம்,வரலாறு, சமூக ஆய்வுகள் தொடர்பான தலைப்புகள்,பாடத்திட்டங்களுக்கு  நிபந்தனை விதிப்பது தன்னிச்சையானது, நியாயமற்றது மற்றும் மிகையானது.  இது மாணவர்கள்  உதவித்தொகை (NOS ) பெறுவதற்கு தடையாக இருக்கிறது..இந்தியாவின்  உச்ச நீதிமன்றம், பரந்த அளவிலான அல்லது தேர்வு சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் சட்டங்கள் / விதிகளை ரத்து செய்துள்ளது.  எனவே, இந்த சமூகங்களின் நலன் மற்றும் சமூக நீதியின் உணர்வின் அடிப்படையில், நான் உங்களிடம் பின்வரும் கோரிக்கைகளை  முன்வைக்கிறேன்  i) NOS இன் கீழ் வழங்கப்படும் உதவித்தொகைக்கான இடங்களின் எண்ணிக்கை (பட்டியல் சாதிகள், மறுக்கப்பட்ட, நாடோடி மற்றும் அரை நாடோடி பழங்குடியினர், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் மற்றும...

தற்சார்பு தலித்துகளின் முன்னேற்றம்..|| அறிஞர் ரவிக்குமார். mp

படம்
 தலித்துகளின் முன்னேற்றமும் - ரவிக்குமார்.mp தொழில் வளர்ச்சி ஏற்படாமல் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது என்பது யாவரும் அறிந்த உண்மை. ஆனால் அந்த வளர்ச்சியில் சாதாரண மக்களுக்கும் பங்கிருக்க வேண்டும். அப்போதுதான் வளர்ச்சி என்பதற்கு சரியான அர்த்தம் இருக்கும். இன்று சீனாவின் பொருளாதார நிலையோடு இந்தியாவை ஒப்பிட்டால் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருப்பதைப் பார்க்கலாம். அங்கும் தொழில்மயத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.இந்தியாவிலும் அதே கொள்கையைத்தான் பின்பற்றுகிறார்கள். ஆனால் அங்கு மக்களின் வாழ்க்கைத்தரத்தில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் இந்தியாவில் ஏற்படவில்லை. அதற்குக் காரணம் சீனாவின் தொழில்வளர்ச்சி எல்லா தரப்புத் தொழிலாளர்களையும் உள்வாங்குவதாக இருக்கிறது. ஆனால் இந்தியத் தொழிற்சாலைகளோ ஸ்கில்டு லேபர் எனப்படும் திறன் மிக்க தொழிலாளர்களை மட்டும்தான் வேலைக்கு எடுத்துக்கொள்கின்றன. தொழில் வளர்ச்சி காரணமாக உருவாகியிருக்கும் நகரமயத்தினால் நகரங்களை நோக்கி ஈர்க்கப்படும் தொழிலாளர்கள் அங்கு வேலைவாய்ப்புச் சந்தையில் தமது உழைப்பை விற்கமுடியாமல் தவிக்கின்றனர். ...